அப்படி ஒரு நாள் வேலைக்கு போறப்போ, ஒரு இடத்துல புதையல் இருக்கு. அதை பார்த்த சோமு சொல்லுறான்
"நான் ரொம்ப வே அதிஷ்டசாலி, பாரு எனக்கு புதையல் கிடைச்சிருக்கு"னு சொல்ரான். உடனே ராமு
"நாம ரெண்டு பேரும் அதிஷ்டசாலின்னு சொல்லு", நாம ரெண்டு பேருமே தான பார்த்தோம்"னு சொல்ரான்.
உடனே சோமு "இல்ல நான் தான் புதையல முதல பார்த்தேன், அதுனால புதையல் எனக்கு தான் சொந்தம்" னு சொல்ரான். அதை கேட்ட ராமு, சோமு கிட்ட தேவை இல்லாம பிரச்னை பண்ண வேண்டாம்னு அமைதியா இருக்கான்.
அப்போ தூரத்துல இருந்து ஒரே சத்தம். என்னடா னு திரும்பி பாக்குறாங்க. அங்க ஒரு கூட்டம், கையில கம்போட ஓடி வர்ரத பாக்குறாங்க. கூட்டத்துல ஒரு சத்தம் "கோவில் நகையை யாரோ திருடிட்டாங்க, திருடனை பிடிங்க" னு. உடனே சோமு பயந்து,
டேய் ராமு இந்த நகையோட அந்த கூட்டம் நம்மள பார்த்த நாம தான் கோவில் நகையை திரிடிட்டோம் னு அடிக்கப்போறாங்கனு சொல்ரான்.
அதை கேட்ட ராமு,
உன்ன அடிப்பாங்கனு சொல்லு. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி புதையல் உனக்கு தான் சொந்தம்னு சொன்ன, அதுனால அடியும் உனக்கு தான் சாந்தம்னு, ராமு அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டான்.
இதுல இருந்து என்ன தெரியுது, நம்மளுக்கு கிடைக்கிற நல்லதை மத்தவங்க கூட பகிர்த்துக்களனா, நம்ம கஷ்ட காலத்துல அவங்க நம்ம கூட இருக்க மாட்டாங்க
Moral :
SHARING IS GOOD

0 Comments
Post a Comment
Thank U for Visit My Story Blog.. I hope U enjoy it...