ஒரு ஊர்ல கவிதா என்கிற சிறுமி இருந்தா. அவ ரொம்பவே நல்ல பொண்ணு. அவ சின்ன வயசுலயே அவங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்க அப்பா இன்னொரு கல்யாணம் பணிகிட்டாங்க.

அப்பாவுக்கு கவிதா னா ரொம்ப பிடிக்கும். இப்போ கவிதா, தன் அப்பா சித்தி கூட இருக்குறா. அவங்க சித்திக்கு ஒரு பெண் குழந்தை. அவ பேரு மாலா.

சித்திக்கு கவிதாவை பார்த்தாலே பிடிக்காது. இன்னொருத்தி பொண்ணுகுறதாலயோ என்னமோ கவிதாவை ரொம்ப கொடுமை படுத்துவாங்க. வீட்ல உள்ள எல்லா வேலையையும் கவிதா கிட்ட தான் கொடுப்பாங்க. கவிதா சொன்ன சொல் தட்டாம எல்லா வேலையையும் சமத்தா செஞ்சிருவா.

ஒரு நாள் அவங்க சித்தி, ஒரு பிடி எள்ளு கொடுத்து, அதை சுத்தம் பண்ணி வைக்க சொன்னாங்க. அந்த எள்ளுல ஒண்ணு கூட கம்மியாக கூடாதுனு சொல்லிட்டு போனாங்க. கவிதா எள்ள நல்லா கழுவி வெயில் ல காய வச்சிட்டு இருந்தா.

அப்போ அந்த வழியா, பசியோட ஒரு காகா பறந்து வந்துச்சி. எள்ள பார்த்த உடனே காக்காவுக்கு ரொம்ப சந்தோசம். உடனே வேகமா சாப்பிட அரமிச்சிருச்சி. காக்காவோட பசியை புரிச்சிகிட்டு கவிதா அப்படியே விட்டுட்டா.

காக்கா நல்லா பசி தீர சாப்பிட்டதும் கவிதாவுக்கு நன்றி சொல்லிட்டு, "என் பசிய போக்குன உனக்கு என்ன வேணும்"னு கேட்டுச்சு. கவிதாவோ தனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னா. அதை கேட்ட காகா உனக்கு ஏதாவ்து தேவைப்பட்டா என்ன வந்து பாரு, நான் கோவில் மரத்துல தான் இருப்பேன்னு சொல்லிட்டு பறந்து போயிடுச்சி.

வீட்டுக்கு வந்த சித்தி, எள்ளு கம்மியானத கவனிச்சு கவிதா கிட்ட கேக்குறாங்க. கவிதா நடந்ததை சொன்னதும் அவள அவங்க ரொம்ப திட்டுறாங்க. நீ அந்த எள்ளோட வந்தா தான் வீட்ல இடம், இல்லனா வெளிய போயிடு னு வீட்ட விட்டு வெளிய தொரத்திட்டாங்க.

கவிதா ரொம்ப சோகத்தோடு வேற வழி இல்லாம காகா வ பார்க்க கோவில் மரத்துக்கு போறா. அங்க காகா கிட்ட, வருத்தத்தோடு நடந்ததை சொல்றாள். காகா கவிதாவோட நிலைமையை புரிச்சிகிட்டு அவளை தன் வீட்டுக்கு அழைச்சிட்டு போச்சி.

அங்க ரொம்ப எள் மூட்டைகளும் தானிய மூட்டைகளும் இருந்துச்சு. காகா கவிதாவை பார்த்து, ரொம்ப பசியோட இருந்த எனக்கு சாப்பிட எள் கொடுத்த நீ செஞ்ச உதவிக்கு நன்றி கடனா இதுல ஒரு மூட்டை எள்ளு எடுத்துக்கோ னு சொல்லுச்சு. கவிதா அதுல ஒரு மூட்டை எள்ளு எடுத்துகிட்டாள். காக்காவுக்கு நன்றி சொல்லி அங்க இருந்து புறப்பட தயாரானாள். காகா அவள கூப்பிட்டு, நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்குற, உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உனக்கு ஒரு பரிசு கொடுக்க ஆசை படுறேன்னு சொல்லுச்சு. உடனே தன் வீட்ல இருந்த ஒரு தங்க பிஸ்கட்ட கவிதாவுக்கு கொடுத்துச்சு. இத யார்கிட்டயும் கொடுக்க கூடாது. இது உன் நல்ல மனசுக்கு நான் தர்ற பரிசுன்னு கொடுத்துச்சு.

கவிதா அதை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போறாள். சித்திகிட்ட அந்த எள் மூட்டையை கொடுக்கிறாள். ஒரு மூட்டை எள் ல பார்த்த சித்திக்கு ரொம்ப சந்தோசம். எப்படி இது கிடைச்சதுனு விசாரிக்கிறாங்க. கவிதா நடந்ததை எல்லாத்தையும் சொல்றா. அதை கேட்ட சித்தி பேராசை படுறாங்க. உடனே அவ பொண்ண கூப்பிட்டு ஒரு பிடி எள் கொடுத்து, கோவில் மரத்துல உள்ள காக்காவுக்கு இத கொடுத்து, பதிலுக்கு நிறைய எள் மூட்டையையும், நிறைய தங்க பிஸ்கட்டையும் வாங்கிட்டு வர சொல்றாங்க.

உடனே மாலா தன் அம்மா சொன்ன மாதிரி, கோவில் மரத்துக்கு போய் அந்த காகாவை பார்த்து, என் அக்கா கவிதாவுக்கு, நீ எள் முட்டையையும் ஒரு தங்க பிஸ்கட்டும் பரிசா கொடுத்திருக்க. நானு உனக்கு சாப்பிட எள் கொண்டு வந்துருக்கே, இத சாப்பிட்டு எனக்கு அதை விட அதிக பரிசு கொடுனு கேட்டாள். உடனே மாலாவோட பேராசையை புரிஞ்ச்சிகிட்ட காகா, இதோ பரிசு கொடுத்தா போச்சினு சொல்லிட்டு, மரத்துல இருந்து வேகமா பறந்து வந்து அவளை சுத்தி சுத்தி வந்து அவ மேல எச்சம் போட்டுருச்சி.

மாலா அழுதுகிட்டே வீட்டுக்கு போறாள். அங்க தன் அம்மா கிட்ட காகா செஞ்சத சொல்றா. அதை கேட்ட மாலாவோட அம்மாவுக்கோ பயங்கற கோபம் வந்துச்சி. உடனே கவிதாவை கூப்பிட்டு, காக்கா தந்த பரிசை கேட்குறாங்க. கவிதா அந்த தங்க பிஸ்கட்டை தன் சித்தி கிட்ட கொடுக்குறா. தங்க பீஸ்கட் அவங்க சித்தி கிட்ட போனதும் அது சாதாரண பிஸ்கட் ஆ மாறிடுச்சு. உடனே அவங்க சித்தி அதை பார்த்ததும், இதத்தா தங்க பிஸ்கட் னு சொன்னயா.. இந்தா இதை நீயே வச்சிகோனு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அந்த பிஸ்கட் கவிதா கிட்ட வந்ததும் மறுபடியும் தங்கமா மாறிடுச்சு

இந்த கதைல இருந்து என்ன புரியுது, நாம பேராசை பட கூடாது. நல்லதோ கெட்டதோ, நம்ம வாழ்க்கைல நம்ம குணத்துக்கு ஏத்த மாதிரி தான், கடவுள் நம்மளுக்கு பரிசு கொடுப்பாரு

அறிவுரை
பிரதிபலன் எதிர்பார்த்து உதவி செய்யும் போது ஏமாற்றம் கிடைக்கும். பிரதிபலன் எதிர் பார்க்காமல் உதவி செய்யும் போது நிம்மதி கிடைக்கும்