ஒரு ஊர்ல ராஜு , குமார் னு அண்ணன் தம்பி இருந்தாங்க. அவங்க ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவங்க. அவங்க அப்பா ஒரு பிரைவேட் கம்பெனி ல கிளெர்க் ஆ இருந்தாங்க. அம்மா இல்லத்தரசி.

அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் ரெண்டு பசங்களையும் நல்ல படிக்கவச்சாரு. ராஜு , குமார் ரெண்டு பேரும் ஸ்கூல் காலேஜ் னு நல்லா படிச்சி வெளிய வந்தாங்க. ரெண்டு பேரும் இப்போ வேலை தேடவும் அரமிச்சிட்டாங்க. அவங்க ஒரு கிராமத்துல வசிக்கிறதால ஒவ்வொரு முறையும் இன்டெர்வியூ கு சிட்டி க்கு தான் போகணும்.

பல முறை முயற்சி பண்ணியும் சரியான வேலை கிடைக்கல. ரெண்டு பேருக்கும் ஒரு கட்டத்துல பயம் வருது. நமக்கு வேலையை கிடைக்காம போயிடுமோனு பயபடுறாங்க. குமாரோ ஒரு கட்டத்துல வேலை தேடுறதையே ஸ்டாப் பண்ணிட்டா. வீட்ல நல்லா தூங்குறது, நல்லா சாப்பிடுறது, தேவை இல்லாத வீடியோஸ் பாக்குறது, பிரெண்ட்ஸ் கூட நல்லா ஊர் சுத்துறது னு நேரத்தை வீணடிக்கிறான். ஆனா ராஜூவோ அடுத்ததடவை கண்டிப்பா இன்டெர்வியூல செலக்ட் ஆகணும்னு யோசிக்கிறான்.

வீட்ல இருந்து யூ-டியூப்ல பிரீ யா சாப்ட்வேர் கத்துக்குறான். நல்லா படிச்சிட்டு ஒரு சில ப்ராஜெக்ட்ஸும் பண்ணி பாக்குறான்.

பிரியா இருக்குற நேரத்துல ஒரு யூ-டியூப் சேனல் ஏன் ஸ்டார்ட் பண்ணகூடாது னு யோசிக்கிறான். தான் சேமிச்சு வச்ச காசுல ஒரு மைக் வாங்குறான். அத ஆர்டர் பண்றது அன்பாஸ்ங் பண்றதுனு அதையே பர்ஸ்ட் வீடியோவா போடுறான். இப்படியே வாரத்துக்கு ஒரு வீடியோவ போடுறான். அவன் யூ-டியூப் சேனல் பெருசா ரீச் ஆகாடாலும் அவன் அத பெருசா கண்டுக்கல. சாப்ட்வேரையும் நல்லா கத்துக்குறான்.

இப்படியே ஒரு வருஷம் ஆகுது. ராஜு இப்போ சாப்ட்வேர் நல்லா படிச்சி ரெண்டு ப்ராஜெக்ட யும் முடிச்சி வச்சிடான். அவன் சேனலும் நல்லா ரீச் ஆயிடுச்சி. இப்போ ராஜு ஒரு இன்டெர்வியூக்கு அப்ளை பன்றான். இன்டெர்வியூ கு போறான், இந்த தடவை ராஜு கு வேலை கிடைச்சிருச்சி. ஒரு வாரத்துல வேலைல சேரனும். அப்பா கிட்ட சொல்றான் அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். உடனே ராஜு சென்னை ல ஒரு விடுதி பாத்து, அங்க ஷிப்ட்டும் ஆகுறான்.

வேலைக்கு போக ஸ்டார்ட் உம் பண்ணிடான் . ஒரு பக்கம் வேலைக்கி போறது, ஒரு பக்கம் வீடியோஸ் அப்லோட் பண்றது னு ரொம்ப வே பிசியா இருக்கான்.

ஒரு மாசம் ஆயிடுச்சி இப்போ ராஜுக்கு முதல் மாச சம்பளம் வந்துருச்சி. தன் செலவுக்கு போக மீத பணத்த அப்பாவுக்கு அனுப்பி வைக்கிறான். வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். ஆனா, குமாரோ வறுத்த படுறான். ச்சா... நாம தான் நேரத்தை ரொம்ப வீணடிச்சிட்டோம். நாமளும் எப்படியாவது ஒரு வேலைக்கு போகணும் னு யோசிக்கிறான்.

இதுல இருந்து என்ன புரியுது, நேரத்தை வீணடிக்க கூடாது. முயற்சி பண்ணிகிட்டே இருக்கனும். தொடர்ந்து தோல்வியே ஆனாலும் நாம முயற்சி பண்றத நிறுத்தவே கூடாது.
விடா முயற்சியும் விடா பயிற்சியும் இருந்தா வாழ்க்கைல வெற்றி நிச்சயம்.

அறிவுரை
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
முயற்சி திருவினை யாக்கும்.