கடவுளிடம் சண்டை :

கடவுளிடம், ஒரு விவசாயி கடுமையாக சண்டைக்குப் போனான்.
'உனக்கு பயிர்களை பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த போது, மழையை அனுப்புகிறாய்; தப்பான சமயத்தில் காற்றை வீசவைக்கிறாய். வறண்ட பொழுதில் மழையை பெய்ய வைக்காமல், பயிர்களை வாட வைக்கிறாய். இனி இந்த வேலையை நீ செய்ய வேண்டாம், அந்த வேலையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றான்.

வரம் பெற்ற விவசாயி :

கடவுள் உடனே, 'அப்படியா? சரி, இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம், உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்' என்ற வரத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. மழையே பெய் என்றான், மழையும் பெய்தது. மழையே போதும் நில் என்றான், மழையும் நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சை கேட்டன. பயிர்களும் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியை பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

பாழாகிய பயிர்கள் :

அறுவடை காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதை உதிர்த்து திறந்து பார்த்தான்; அதிர்ந்தான். உள்ளே, தானியத்தைக் காணவில்லை. வெறும் பதராக இருந்தது. அடுத்து அதற்கடுத்து என்று ஒவ்வொரு தானியத்தையும் அறுத்து பார்த்தான், அனைத்தும் பதராகவே இருந்தது.

விவசாயி கேள்வியும், கடவுளின் விளக்கமும் :

'ஏ கடவுளே...' என, கோபத்தோடு கூப்பிட்டான். 'மழை, வெயில், காற்று என எல்லாவற்றையும், மிக சரியாகத்தானே பயன்படுத்தினேன். ஆனாலும், பயிர்கள் பாழாகி விட்டதே ஏன்?' எனக் கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார். "என் கட்டுப்பாட்டில் இருந்த போது காற்று வேகமாக வீசும். அப்போது, பயிர்கள் எல்லாம் அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப் போல் பூமிக்குள் தங்கள் வேர்களை ஆழமாக அனுப்பி இறுக பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரை தேடி, வேர்கள் நாலாபக்கமும் செல்லும். போராட்டம் இருந்ததால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு வலுவாக வளர முடிந்தது. பிடித்ததை எல்லாம் வசதியாக அமைத்துக் கொடுத்ததில், உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்து விட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க, அவற்றிற்கு தெரியவில்லை" என்றார்.

வரத்தை திருப்பி கொடுத்த விவசாயி :

‘வேண்டாம் ஐயா, வேண்டாம்! உன் மழையும் காற்றும். நீயே வைத்துக்கொள்’ என்று கடவுளிடமே அவற்றை திருப்பி கொடுத்து விட்டான் விவசாயி.

அறிவுரை - வலிமையான வாழ்க்கை பெற போராடுங்கள் :

பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும் பொழுதுதான் உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்ற ஒரு பிரச்னையிருந்ததால் தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சனையாகும் போதுதான் வாகனம் உருவானது. பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட்டால், உங்கள் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள். பிரச்னையில்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை. போராடுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கையை அழகாகும்.

QUOTES :

வெற்றிக்கான நிச்சயமான பாதை - போராட்டம்
வாழ்க்கையின் வெற்றிக்கு போராட்டம் முக்கியம்
வலிமையான வாழ்க்கை பெற போராடுங்கள்
போராட்டம் தான் வெற்றியின் தூணாக இருக்கும்
வாழ்க்கையில் வெற்றியை பெற வேண்டுமா? போராடுங்கள்!
வாழ்க்கையில் போராட்டம் நம்மை வலிமையாக்கும்
சாதனைக்கான அடிப்படை - கடினமான போராட்டம்

Struggles Build Strength
The Power of Struggle in Life
Success Comes Through Struggles
Embrace Struggles for a Stronger You
No Struggle, No Strength
Struggles Lead to Powerful Success
Fight Your Way to Success
Strength is Born from Life’s Struggles