முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை
பசிக்குத் தீர்வு, பூசணிக்காய் திருட்டு!
முழு பூசணிக்காயை சோற்றில மறைச்சிட்டானு ஊரில சொல்வாங்களே. அந்த கதைவந்தது எப்படி தெரியுமா???இது உண்மையில் பழமொழி அல்ல. “முழுப் பூசணியை சோற்றில் மறைத்தால் போல” என்றொரு சொற்றொடரைப் பழமொழியாக்கி விட்டார்கள். இந்தச் சொற் பாவனை எப்படி வந்தது என்பதற்கு ஒரு கதையும் இருக்கின்றது. என் நினைவில் உள்ளதை என் ஸ்டைலில் எழுதுகிறேன்.
சின்ன வயசு பையன் அவன். ஊரில் வறுமை. பசிக்கொடுமை. உண்பதற்கு ஒன்றும் இல்லை. பக்கத்துவயலில் பூசணிக்காய்கள் மட்டும் நிறைய காய்த்துகிடந்தன. இவனுக்கு வேறுவழியில்லை இரவோடு இரவாக பூசணிக்காய்களை பறித்து போய் பக்கத்து ஊர் சந்தையில் திருட்டு தனமாக விற்று வயிறு பசியாறிவந்தான். அதற்கும் வந்தது வேட்டு அவனை கையும் களவுமாக சந்தையிலே பிடித்துவிட அன்று முதல் அவனை "பூசணிக்காய் திருடன் " என்று பட்டம் கட்டி கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
பட்ட பெயரும் மனவுளைச்சலும்!
காலங்கள் உருண்டு ஓட அவன் வளர்ந்து பெரியவனாகவும் பணக்காரனாகவும் ஆன போதும் அவனது பட்டப்பெயர் மட்டும் மாறவில்லை. அவன் வீட்டை அடையாளப்படுத்துபவர்கள் கூட "அந்த பூசணிக்காய் திருடன் வீடா? அதற்கு இந்த வழியாக போகவேண்டும்" என்று தான் வழிகாட்டி அனுப்பி வைப்பார்கள்.இப்படி பணம், ஆஸ்திகள் இருந்தும் இந்த பூசணிக்காய் திருடன் பட்டம் மட்டும் மாறாது நினைத்து இருப்பது அவனுக்கு மிகுந்த மன உளச்சளை தந்தது.
சாமியாரின் ஆலோசனை
அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். அவரிடம் சென்று தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தான். சாமியர் ஒரு உபாயம் சொன்னார். அவன் வீட்டில் ஆறுமாதத்திற்கு தொடர்ந்து அன்னதானம் போடுமாறு சொன்னார்.அவன் சோறு போடும் விஷயம் ஊர் முழுக்க பரவியது. தடல்புடலான சமையலுக்கு ஏற்பாடு செய்தார். பூசணிக் கறியும் உள்ளடக்கம். வாழை இலை போட்டு, அனைவருக்கும் சோறு பரிமாறப்பட்டது.
பூசணிக்காய் மறைவு, சோற்றில் நடந்த மெய்வு!
எந்த நேரம் அவன் வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.அவன் வீட்டிற்கு அன்னதான சாப்பாடு சாப்பிடவரும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு “கும்பிடுறன் சாமி” நன்றி சொல்லி விட்டு, வயிற்றைத் தடவி ஏப்பம் விட்டபடி கிராமத்திற்கு போய்ச் சேர்ந்தார்களாம்..............
இப்போது இவர் வீட்டை விசாரிக்கும் போது "அந்தச் சோறு போடுவாங்களே அந்த வீடுங்களா? என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கதை படித்தீர்களா?
கதைப் பயணம்:
அவர்களுக்கு சோற்றைப் போட்டு பூசணிக்காய் திருட்டை எப்படி அந்தப் பணக்காரர் மறைத்தார் பார்த்தீர்களா?அன்றிலிருந்துதான் “முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி ...” என்ற சொற்றொடர் உருவானது.
ஒரு பெரிய விடயத்தை, சிறிய சங்கதிகளால் “பூசி மெழுக” முனைவதைக் குறிப்பதற்காக இந்தச் சொற்றொடர் - பழமொழி பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/




0 Comments
Post a Comment
Thank U for Visit My Story Blog.. I hope U enjoy it...